மக்களவைக்கு ஏப்ரல் 11 முதல் முதல் மே 19 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியே மீண்டம் பிரதமர் ஆவார் என்று சில கருத்துக் கணிப்புகளும், பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்பதால் மோடி மீண்டும் பிரதமர் ஆக முடியாது என்று சில கருத்து கணிப்புகளும் தகவல் வெளியுள்ளன,

இதனிடையே கடந்த சில மாதங்களில், காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி நாமு முழுவதும் செல்வாக்கு பெற்று வருகிறார். அவரது அசுர வளர்ச்சியைக் கண்டு அவரே, பிரதமராவதற்கு வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால், 'இந்தத் தேர்தலில், பாஜக அமோக வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார்' என, உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த, பிரபல ஜோதிடர்,ரவிசங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.

நட்சத்திரங்கள், கோள்களின் தற்போதைய சஞ்சாரத்தின்படி, இந்தத் தேர்தல், மோடிக்கே மிகவும் சாதகமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் தலைவர், ராகுல், பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பார். ஆனால், இந்தத் தேர்தலில், அவர் பிரதமராக முடியாது. தேர்தலுக்கு முன், திருமணம் நடந்தால், அவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராகுலுக்கு விரைவில் திருமணம் நடந்தால்,2024 தேர்தலில், பிரதமராவதற்கான வாய்ப்பு, அதிகம் உள்ளது என்றும், பண்டிட் ரவிசங்கர் பாண்டே தெரிவித்தார்.
எனவே  ராகுலுக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான முயற்சிகளில், அவரின் தாய் சோனியா ஈடுபட வேண்டும் என அந்த ஜோதிடர் அறிவுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், ராகுலை விட, அவர் தங்கை, பிரியங்காவுக்கு அரசியல் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு அவர் தலைமையேற்றால், கட்சி வளர்ச்சியை காண முடியும். ஆனால், ராகுல் டம்மி'யாகி விடுவார் என்றும், அவர் கூறியுள்ளார்.