சத்திஷ்கர் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி , மத்திய அரசின் என்.பி,ஆர்.,  என்.ஆர்.சி. அனைத்துமே ஏழைகள் மீதான வரிச்சுமை தான் என குற்றம்சாட்டியுள்ளார். 

ராகுலின் குற்றச்சாட்டுக்கு  விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர், 2019-ம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என கிண்டல் செய்துள்ளார். . பொய், வதந்திகள் பரப்புவது, ஊழல் செய்வதையே பிரதானமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கொண்டு வரும் திட்டங்கள் புரியாது.

என்.பி.ஆர். என்பது எந்தவொரு பணப்பரிவர்த்தனையையும் உள்ளடக்கியது அல்ல, அதன் அம்சம் ஏழைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது.  இதனால் அரசாங்க நலத்திட்டங்கள்  மக்களை எளிதாக சென்றடைய உதவும் என பிரகாஷ் ஜவடேகர்  விளக்கம் அளித்துள்ளார்.