சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்க உள்ளதால் ரஃபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
மத்திய அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றம் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது , ரஃபேல் விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா தொடரவிருந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது அவர் உச்சநீதிமன்றத்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். நீதி நிலைநாட்டப்பட்டதன் மூலம் எங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அர்கள் ரஃபேல் விவகாரத்தில் இருந்து ஓடிப்போக முடியாது. அது நடக்காது. மக்கள் மன்றத்தில் விவாதம் நடத்தாமல் மோடி ஓடினார். ரஃபேல் விவகாரத்தில் உண்மை இருப்பதால் உண்மையிடம் இருந்து யாரும் தப்பியோடி விட முடியாது என்றும் ராகுல் கூறினார்..
ரஃபேல் ஒப்பந்தத்தில் மக்களின் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்தது சந்தேகத்தின் நிழல் துளிகூட இல்லாமல் இந்த விசாரணையில் தெரியவரும் என்ற ராகுல் காந்தி . அடுத்து இனி என்ன நடக்கும்? என்று பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்..
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 8, 2019, 8:32 PM IST