ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், சில மாதங்களுக்கு முன்பு இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி தற்போது விவாதத்துக்கு வருவாரா அல்லது ஓடிப்போவாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல்போர் விமான ஒப்பந்தத்தில்முறைகேடுநடைபெற்றதாகமத்தியஅரசுமீதுகாங்கிரஸ்உள்ளிட்டஎதிர்க்கட்சிகள்குற்றம்சாட்டிவந்தன. மேலும் ரஃபேல்பேரம்குறித்துஉச்சநீதிமன்றத்தின் கண்காணிப்புடன்கூடியசிபிஐ விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என்று., ஆம்ஆத்மிபிரமுகர்சஞ்சய்சிங், முன்னாள்மத்தியஅமைச்சர்கள் யஷ்வந்த்சின்கா, அருண்ஷோரி மற்றும்வழக்கறிஞர் பிரசாந்த்பூஷண்ஆகியோர்மனுதாக்கல்செய்தனர்.

இந்தமனுக்கள்மீதுதலைமைநீதிபதிரஞ்சன்கோகாய்தலைமையிலானஅமர்வுவிசாரணைநடத்தியது. இதையடுத்து தலைமைநீதிபதிதலைமையிலான அமர்வு, இம்மனுக்கள்மீதுஇன்றுதீர்ப்புஅளித்தது. அதில்ரஃபேல் போர்விமானங்களைமத்தியஅரசுகொள்முதல்செய்யும்ஒப்பந்தத்தில்எந்தவிதமானசந்தேகமும்நீதிமன்றத்துக்குஇல்லை என தெரிவித்துள்ளது.

ரஃபேல் போர் விமானகொள்முதல்விவகாரத்தில்நீதிமன்றம்தலையிட்டுவிசாரணைநடத்தஎந்தமுகாந்திரமும்இல்லை என்றும் , . போர்விமானங்களின்விலையைஒப்பிட்டுப்பார்த்துவிசாரிப்பதுநீதிமன்றத்தின்பணிஅல்லஎன்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ரபேல்போர்விமானக்கொள்முதல்விவகாரத்தில்விசாரணைநடத்துவதற்கும், நீதிமன்றம்தலையிடுவதற்கும்எந்தவிதமானமுறைகேடும்இருப்பதாகத்தெரியவில்லை. எனவே, ரஃபேல்போர்விமானங்கள்கொள்முதலில்விசாரணைநடத்தவேண்டியஅவசியமில்லைஎன கூறி மனுக்களைத்தள்ளுபடிசெய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பாஜக தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன், அமித் ஷா, அனில் அம்பானி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் ராகுல் காந்தியையும் வசை பாடியுள்ளனர். ராகுல் ஒரு பொய்யர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த தீர்ப்பு குறித்து பாஜக மாநிலங்கனவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் பொய் சொல்லுவது, ஏமாற்றுவதைவிட மற்றவைகள் சிறந்தது – ஒவ்வொரு பொய்யும் ஒரு விஷம்… என்ற லியோ டால்ஸ்டாயின் உவமைகளை ராகுல் காந்தியின் கவனத்துக் கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் பொய்யை உச்சநீதிமன்றம் உடைத்தெறிந்துவிட்டதாகவும் அவர்
கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது மற்றொரு டுவிட்டர் பதிவில், பாஜக தலைவர் அமித்ஷா கூறியதைப் போல , ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி தற்போது விவாதத்துக்கு வருவாரா அல்லது ஓடிப்போவாரா ? என கிண்டல் செய்துள்ளார்.
