தமிழ்ப்பற்றில் உங்கள் தந்தை கருணாநிதியை விட எனது தந்தை உயர்ந்தவர் என மு.க.ஸ்டாலினுக்கு ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பதுரை பதிலடி கொடுத்துள்ளார்.  

ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே உச்சநீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வெளியிட அக்டோபர் 23 வரை தடை விதித்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ’ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பாக நின்ற அப்பாவு தான் வெற்றி பெறுவார். எம்.எல்.ஏ. இன்பதுரை மறுவாக்கு எண்ணிக்கையின் போது இன்பதுரை துன்பதுரை ஆகி விட்டார்’’ என நையாண்டி செய்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ இன்பதுரை தனது ட்விட்டர் பதிவில், ’’இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்று எனது தமிழ் பெயரை  கிண்டல் அடித்திருக்கிறார் ஸ்டாலின். தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொண்டு மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்ட உங்கள் தந்தைக்கு முன்பாக, இன்பதுரை என்று அழகு தமிழ் பெயர் சூட்டி மகிழ்ந்த என் தந்தையின் தமிழ்பற்றே உயர்ந்து நிற்கிறது’’என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப்பதிவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ’’துன்பம் தமிழ் இல்லையா? ஸ்டாலின் காரண பெயர். அழகிரி, கனிமொழி, தமிழ் பெயர் இல்லையா தோல்வி உறுதி என்று தெரிந்து கொண்டு பயந்து தடை வாங்கியது யார்? ‘’

 

இங்கு விவாதம் தமிழ் பெயர்களை குறித்து அல்ல. நீங்கள் பெற்ற (பெறாத) வாக்குகள் குறித்து. அதன் விவரங்களை வெளியிடுவதில் என்ன பிரச்சனை ?
 துரை தெலுங்கிலிருந்து தமிழுக்குப் பெறப்பட்ட சொல் ஆகும். துன்பம்ங்கிறது தமிழ்ச்சொல்தானே..அதில் என்ன தமிழை குறை சொல்வதற்கு இருக்கிறது???
இன்பத்துக்கு எதிர்ச்சொல் துன்பம்..அதை தமிழை கேவலப்படுத்தின மாதிரி திரிக்காதீரு’’ எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.