ஈனம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் எங்கே போனது.? வன்னியர்களை வச்சு செய்த ராமதாஸ்.. தாறுமாறு பேச்சு.
அத்தனை எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் வைத்திருந்த காட்சி இப்போது இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்போது இருந்த அந்த வீரம் இப்போது எங்கே போனது? அந்த சுயமரியாதை, ஈனம், மானம், ரோஷம், சூடு, சொரணை இது அனைத்திலும் மிகுந்தவர்கள் வன்னியர்கள்,
கட்சி தொடங்கி 40 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாமகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை, நினைத்த அளவுக்குகூடவெற்றி பெற முடியவில்லை, ஒரு காலத்தில் எப்படி இருந்த பா.ம.க இப்படி ஆகிவிட்டதே என தனது கட்சி நிர்வாகிகளிடம் ராமதாஸ் ஆதங்கம் தெரிவித்திருப்பது அக்கட்சியனர் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த 9 மாட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாதது அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசுவை நிலைகுலைய வைத்துள்ளது. 9 மாவட்ட தேர்தலில் 7 மாவட்டங்களில் வலுவாகவும் பலமாகவும் வன்னிய மக்கள் அடர்த்தியாக உள்ள போதும் தங்களால் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஆதங்கத்தை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: கட்சி இனி வளரும்னு நம்பிக்கை இல்ல.. துரோகிகளே பாமகவில் இருந்து விலகிவிடுங்கள்.. நெருப்பாக கொதித்த ராமதாஸ்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் கடந்த 16ஆம் தேதி பாமகவின் பொதுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், எனக்கு இருக்கிற வேதனை கொஞ்ச நஞ்சமல்ல, மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன். நாம் வலுவாக இருக்க கூடிய மாவட்டங்களில்கூட நம்மால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை. அப்படி என்றால் 40 ஆண்டுகாலம் நாம் என்ன கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று வேதனையாக இருக்கிறது. நம் கட்சியில் பலர் சோரம் போகிறார்கள், ஆள்காட்டி வேலை செய்கிறார்கள். ஆனால் இனிமேல் அதெல்லாம் நடக்காது. கட்சிக்கு துரோகம் செய்வார்கள் தயவுசெய்து கட்சியைவிட்டு விலகி விடுங்கள். ஒரு காலத்தில் எப்படி இருந்த பாமக இப்படி மாறிவிட்டது. அத்தனை எம்எல்ஏக்களையும், எம்பிக்களையும் வைத்திருந்த காட்சி இப்போது இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்போது இருந்த அந்த வீரம் இப்போது எங்கே போனது? எங்கே போனது அந்த சுயமரியாதை.
இதையும் படியுங்கள்: இந்தி படிக்க சொன்ன ஊழியரை வேலைய விட்டே தூக்கிட்டோம்.. தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்.
ஈனம், மானம், ரோஷம், சூடு, சொரணை இது அனைத்திலும் மிகுந்தவர்கள் வன்னியர்கள், இப்போது அதெல்லாம் எங்கே போனது? கூட்டணி வைத்திருந்தால் தனக்கு கொஞ்சம் பணம் வந்திருக்கும் என்றுதான் பலரின் மனசாட்சிகள் உறுத்துகிறது. ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க நாம் தவறிவிட்டோம், அப்படி எடுத்திருந்தாலும் அதை நாம் அந்த கட்சியினருக்கு சொல்லிவிட்டோம். 41 ஆண்டுகால உழைப்புக்கு மரியாதை கொடுத்து இருக்கலாம், சில இடங்களில் ஒரு நூறு ஓட்டு கூட முழுமையாக வாங்க முடியவில்லை, இனி அப்படிப்பட்டவர்கள் நம் கட்சிக்கே தேவையில்லை, தயவுசெய்து விலகி விடுங்கள் டீக்கடை ஏதாவது வைத்துப் பிழைத்துக் கொள்ளுங்கள் ஓட்டு மட்டும் பாமகவுக்கு போடுங்கள் என தனது வேதனையை கொட்டித்தீர்த்துள்ளார்.