Asianet News TamilAsianet News Tamil

இந்தி படிக்க சொன்ன ஊழியரை வேலைய விட்டே தூக்கிட்டோம்.. தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்.

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும், எல்லோரும் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ ஊழியர் ஒருவர் அளித்த பதிலால் சொமேட்டோவுக்கு  எதிராக கண்டன குரல் எழுந்தது.

We fired the employee who told us to study Hindi .. Somato apologized to the Tamils.
Author
Chennai, First Published Oct 19, 2021, 12:09 PM IST

இந்தி நாட்டின் தேசிய மொழி எனவே, அனைவரும் இந்தி மொழியை கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது என பதிலளித்த ஊழியரை பணி நீக்கம் செய்து சொமேட்டோ நடவடிக்கை எடுத்துள்ளது.  இதுகுறித்து சொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- எங்கள் வாடிக்கையாளர் சேவையின் முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம்.

மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தை பகிர கூடாது என தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம், இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை, ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம், நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர் மயமாக்கி உள்ளோம், (எடுத்துக்காட்டு: நாங்கள் மாநிலத்திற்கான உள்ளோரும் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தை தேர்வு செய்துள்ளோம்) மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால்சென்டர் சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம். 

இதையும் படியுங்கள்: இந்த மண்ணின் மக்களுக்கு வீடு இல்ல.. சென்னைக்கு அழகு தேவையா.? ஸ்டாலினுடன் மோதும் சீமான்.

We fired the employee who told us to study Hindi .. Somato apologized to the Tamils.

உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்து அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும், எல்லோரும் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ ஊழியர் ஒருவர் அளித்த பதிலால் சொமேட்டோவுக்கு  எதிராக கண்டன குரல் எழுந்தது. அதாவது  தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஸ் என்ற இளைஞர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்த உணவு முழுமையாக வரவில்லை, இதனால் அவர் சாட் பாக்ஸில் புகார் தெரிவித்தார், அப்போது சொமேட்டோ சார்பில் அவருடன் பேசிய நபர், நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதால் சரியான விவரங்களை தெரிவிக்க முடியவில்லை நீங்கள் இந்தியில் கூறுங்கள் என கூறினார். அதற்கு விகாஷ் தமிழ்நாட்டில் சேவை வழங்கும் போது தமிழ் தெரிந்தவர்களை வேலைக்கு வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்: ஷியா முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும் உயிர் தப்பிக்க முடியாது.. ISIS பகிரங்க எச்சரிக்கை.

We fired the employee who told us to study Hindi .. Somato apologized to the Tamils.

அதற்கு மேலும் பதிலளித்த அந்த நபர், இந்தியாவின் தேசிய மொழி இந்தி, எல்லோரும் இந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று பதிலளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விகாஷ் சொமேட்டோ தரப்பில் அளிக்கப்பட்ட பதிலை டுவிட்டரில் பதிவு செய்தார், இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது, தமிழ் மொழியான எங்கள் மொழியில் சேவை வழங்குங்கள், இல்லை என்றால் உங்கள் சேவையே வேண்டாம் என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என சொமேட்டோ தரப்பில் பதிலளித்தா ஊழியரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios