லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரெயில்வே துறை  அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மத்திய அரசு 2 வது முறை பொறுப்பேற்ற பின்னர் , ஊழலை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

இதற்கு உதாரணமாக மத்திய நிதி மற்றும் வரித்துறையில் கமிஷனர் பொறுப்பில் உள்ள 15 க்கும் மேற்பட்டவர்கள் கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஊழல் புரியும் அதிகாரிகள் யார் என கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இது விரைவில் வெளிச்சத்திற்கு வரும் போது பணி விலகல் உத்தரவு பிறப்பிக்கப்படும். 

இது போன்ற நடவடிக்கைகள் தவறு செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று எச்சரிக்கை விடுத்தார்.