Asianet News TamilAsianet News Tamil

நாளை புயலாக உருவெடுக்கிறது புரவி.. மக்களே அடுத்த 4 நாட்களுக்கு உஷார்...90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி..!!

வரும் டிசம்பர் 4ஆம் தேதி மன்னார் வளைகுடா குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதியில் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர்  வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

Puravi is shaping up to be a storm tomorrow .. People, be alert for the next 4 days ... 90 km hurricane .. !!
Author
Chennai, First Published Dec 1, 2020, 1:52 PM IST

வங்க கடலில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக,  கன்னியாகுமரிக்கு கிழக்கு, தென் கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நாளை காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் வரும் 2ஆம் தேதி மாலை அல்லது இரவில்  இலங்கையைக் கடந்து, மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1- 12- 2020 (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Puravi is shaping up to be a storm tomorrow .. People, be alert for the next 4 days ... 90 km hurricane .. !!

 2-12-2020 தென்காசி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  அதி கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Puravi is shaping up to be a storm tomorrow .. People, be alert for the next 4 days ... 90 km hurricane .. !!

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்ர, இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3-12-2020 காலை முதல் இரவு வரை தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Puravi is shaping up to be a storm tomorrow .. People, be alert for the next 4 days ... 90 km hurricane .. !!

குறிப்பாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸகவும் பதிவாககூடும். 

Puravi is shaping up to be a storm tomorrow .. People, be alert for the next 4 days ... 90 km hurricane .. !!

குறிப்பாக டிசம்பர் 3ஆம் தேதி மன்னார்வளைகுடா, தென் குமரி கடல், மற்றும் தென் தமிழக கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வரும் டிசம்பர் 4ஆம் தேதி மன்னார் வளைகுடா குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதியில் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர்  வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios