Asianet News TamilAsianet News Tamil

பெண்ணை மானபங்கம் செய்தவருக்கு பனிஷ்மெண்ட்... கிரமத்தில் அனைத்து பெண்களின் ஆடைகளையும் 6 மாதம் துவைக்க உத்தரவு.!

பீகார் மாநிலத்தில் மதுபானி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் அனைத்து பெண்களின் ஆடைகளையும் இலவசமாக 6 மாத காலம் துவைத்து அயர்ன் செய்து தரவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 
Punishment for the person who raped a woman ... Order to wash all women's clothes in the village for 6 months
Author
Bihar, First Published Sep 23, 2021, 4:09 PM IST

பீகார் மாநிலத்தில் மதுபானி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் அனைத்து பெண்களின் ஆடைகளையும் இலவசமாக 6 மாத காலம் துவைத்து அயர்ன் செய்து தரவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 Punishment for the person who raped a woman ... Order to wash all women's clothes in the village for 6 months

பீகார் மாநிலம், மதுன்பானியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒரு பெண்ணை பாலியல் தொல்லை செய்துள்ளார். அவரை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர் குறைந்த வயதுடையவர்.  கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறையில் இருக்கிறார்.  ஆகையால்  அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.Punishment for the person who raped a woman ... Order to wash all women's clothes in the village for 6 months

இதனை கேட்ட நீதிபதி ஐநாஷ்குமார், ’இளம்வயது என்பதால் குற்றம் செய்ய அனுமதிக்க முடியாது. ஆனாலும் அவருடைய வயதை கருதி ஜாமீனில் விடுதலை செய்கிறோம். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் அவர் 6 மாதத்துக்கு துவைத்து அயர்ன் செய்து வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

மனுதாரரின் வழக்கறிஞரும் இதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். குற்றவாளி துணி துவைக்கும் தொழில் செய்வதால் இப்படியொரு உத்தரவை நீதிபதி வழங்கியதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios