“மாபியான்னு சொன்னால் காலிலிருந்து கழட்டி அடிப்பாங்க”

அதிமுகவின்  இரு அணிகளும் இணைந்த பிறகு,சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரையும்  புதுவை ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்களான புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் இருவரும், எடப்பாடி  அரசை தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏ- வான, கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, தினகரன் அணியை   பற்றி விமர்சிக்க, பொங்கி எழுகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்

அதிலும் குறிப்பாக, போட்டி போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்து வரும் நாஞ்சில் சம்பத் மற்றும்  புகழேந்தி எடப்பாடி  அரசையும் , துணை  முதல்வராக  பதவியேற்ற  ஓபிஎஸ் – யையும்  குற்றம்  சாட்டி வருகிறார்.

இதனை தொடர்ந்து இன்று காலை தினகரன்  ஆதரவாளர்களான  நாஞ்சில் சம்பத்  மற்றும் புகழேந்தி இருவரும்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது, கொதித்தெழுந்து பேசிய தினகரன்  ஆதரவாளரான புகழேந்தி,  மன்னார்குடி மாபியான்னு சொன்னால் காலிலிருந்து கழட்டி அடிப்பாங்க” ன்னு கூறினார். அதாவது  மன்னார்குடியில்  நிறைய மக்கள் வாழ்கின்றனர். இது போன்று பேசி வந்தால்,  மன்னார்குடி  மக்கள் , அவர்கள் காலில் இருப்பதை கழட்டி அடிப்பாங்க” என எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பேச்சை கண்டிக்கும் வகையில், பொறுமை  இழந்து பேசினார் .