Puducherry Deputy governor Kiran Bedi explained that the government did not recommend nomination MLAs

நியமன எம்.எல்.ஏக்களை தான் பரிந்துரைக்கவில்லை எனவும் அரசுக்கு தவறான தகவல் போயுள்ளது எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கமளித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையில் 30 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இதில் 3 எம்.எல்.ஏக்களை அரசே நியமித்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதைதொடர்ந்ந்து, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆளும் நிலையில், பா.ஜ.க உறுப்பினர்களைநியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், இந்து அமைப்புகளின் தீவிர ஆதரவாளர் செல்வ கணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த பதவிக்கு கவர்னர் கிரண்பேடி 3 பேரை தேர்வு செய்து அந்த பட்டியலை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தார்.

இது காங்கிரஸ் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் சபாநாயகர் இருக்கும் நிலையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடியே அவர்கள் மூன்று பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

இது மேலும் புதுச்சேரி ஆளும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கிரண்பேடியின் இந்த செயலை கண்டித்து புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் நியமன எம்.எல்.ஏக்கள் குறித்து துணைநிலை அளுநர் கிரண்பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நியமன எம்.எல்.ஏக்களை தான் பரிந்துரைக்கவில்லை எனவும் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் போயுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு சட்டப்படி நேரடியாக நியமித்தது எனவும் முழு அடைப்பு போராட்டத்தால் வருமானம், வளர்ச்சி பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.