puducherry Cm narayanasamy told about modi government
புதுச்சேரி அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்கும்போது, அவர்கள் பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என கேட்டு அவமானப்படுத்துவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர்,கடந்த ஆட்சியில் நிதி நிலைமையை முதலமைச்சரோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டினார்.
அதனால் புதுச்சேரியில் கூட்டுறவு உள்ளிட்ட பல துறை ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த ஆட்சியில் அளவுக்கு அதிகமாக அதரசுப் பணியாளர்களை நியமித்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசுக்கு தேவையான நிதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு எத்தனையோ கோரிக்கைகள் விடுத்தும் 20 சதவீத அளவுக்கே நிதி வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
நிதி கேட்டு நேரில் சென்றபோது மோடி அரசு, பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்றும் நாங்கள் ஒன்றும் நோட்டு அடிக்கிற மெஷின் வைத்திருக்கவில்லை என்றும் கூறி அவமானப்படுத்துவதாக நாராயணசாமி குற்றச் சாட்டினார்.
