பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடா என்ற கேள்விக்கு, “ இதைத்தான் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறது” என்று டி.ஆர். பாலு என்று சொல்கிறார். ‘அப்புறம் ஏன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்’ எதிர்க்கிறார் என்ற கேள்விக்கு, “நிதியமைச்சரா..? ஒரு தனி மனிதர் பேசுவதை பற்றி எல்லாம் பேசுறீங்களே” என்று சொல்கிறார் டி.ஆர். பாலு.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பாக திமுகவில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும் மாறுப்பட்ட கருத்து இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதை திமுக சொல்லியிருக்கிறது. முந்தைய அதிமுக அரசு ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வர சம்மதிக்கவில்லை. இதேபோல பிற மாநில அரசுகளும் இதே முடிவில்தான் உள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஜி.எஸ்.டி. விவகாரத்தில் திமுக அரசு என்ன முடிவு எடுக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மட்டும் அல்லாமல், பெட்ரோல், டீசல் விலையை அந்த வரம்புக்குள் கொண்டு வர முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்ற கேள்விக்கு, மத்திய அரசு ஏன் இன்னும் பெட்ரோல்- டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவில்லை என்று திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கூறினார். அதற்கு திமுகவைச் சேர்ந்த நிதியமைச்சர்தானே எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று கேள்விக்கு, “அவர் (பழனிவேல் தியாகராஜன்) சொல்கிறார் என்பதற்காக எல்லாம் சொல்லக்கூடாது. பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ஏன் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவில்லை? என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் டி.ஆர். பாலு.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடா என்ற கேள்விக்கு, “ இதைத்தான் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறது” என்று டி.ஆர். பாலு என்று சொல்கிறார். ‘அப்புறம் ஏன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்’ எதிர்க்கிறார் என்ற கேள்விக்கு, “நிதியமைச்சரா..? ஒரு தனி மனிதர் பேசுவதை பற்றி எல்லாம் பேசுறீங்களே” என்று சொல்கிறார் டி.ஆர். பாலு, ‘அவர் தனி மனிதர் அல்ல. அவர் தமிழ்நாட்டோட நிதியமைச்சர். அவர்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு போகிறார்’ என்று சொல்ல, “திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நான்தான். கட்சி தலைவர் மு .க. ஸ்டாலின் சொல்லித்தான் அந்த வாக்குறுதியை எழுதினேன்” என்று மழுப்பலாகப் பதிலளித்திருக்கிறார். 
டி.ஆர். பாலுவின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது திமுகவின் நோக்கம் என்றால், நிதியமைச்சர் ஏன் எதிர்க்கிறார், திமுக தலைமையை மீறி நிதியமைச்சர் செயல்படுகிறாரா என்ற சமூக ஊடங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள். முந்தைய ஆட்சியில் ஜெயக்குமாரை முந்திரிக்கோட்டை, சூப்பர் டூப்பர் முதல்வர் என்று ஜெயக்குமாரை மு.க. ஸ்டாலின் விமர்சித்ததுபோல திமுகவிலும் அப்படி இருக்கிறார்களா என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
