தான் அமைச்சராக இருந்தபோது 30க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் கலந்து கொண்டதாக கூறிய ஜெயக்குமார், பட்ஜெட் தாக்கல் செய்த அன்று ஒருநாள் மட்டுமே ஜிஎஸ்டி கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என கூறினார்.
தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கொஞ்சம்கூட அரசியல் பண்பாடு இல்லையென்றும், அவரை முதலமைச்சரும் கண்டிக்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் நிதித்துறை அமைச்சர் வளைகாப்பு அமைச்சராக மாறிவிட்டார் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த சிவந்தி ஆதித்தனாரின் 86 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் மாலைமலர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது,

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இருக்கிறதா இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது, எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும், ஆனால் பழனிவேல் தியாகராஜன் எவரையும் மதிப்பதில்லை. அவரை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை எனக் கூறினார். அதிமுக ஆட்சியில் இருந்தவரை ஜிஎஸ்டி காக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை, மாநிலத்திற்கு தேவையான அனைத்து நிதியையும் மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்றதாக கூறிய அவர், ஆனால் பிடிஆர் எந்த ஒரு விவரமும் தெரியாமல் பேசி வருகிறார் என்றார்.

தான் அமைச்சராக இருந்தபோது 30க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் கலந்து கொண்டதாக கூறிய ஜெயக்குமார், பட்ஜெட் தாக்கல் செய்த அன்று ஒருநாள் மட்டுமே ஜிஎஸ்டி கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவில்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வளைகாப்பு தியாகராஜன் ஆகி விட்டார் என அவர் விமர்சித்தார். சொந்தக் கட்சிக்காரரான டிகேஎஸ் இளங்கோவனையே அவர் விமர்சனம் செய்கிறார், இதுபோன்ற விமர்சனத்தை யாரும் வைத்ததில்லை என்றும் அவர் கூறினார். அதேபோல் சட்டத் ஒழுங்கை பொருத்தவரையில் தமிழகத்தில் மோசமான நிலை உள்ளது. சட்டம் ஒழுங்கில் திமுக தோற்று விட்டது என்று தான் தற்போது தமிழக மக்கள் கூறி வருகின்றனர்.தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது, எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் என்பதுதான் உண்மை என அவர் கூறினார்.
