Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் நிர்மலா சீதாராமனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பிடிஆர். இதில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ ஆண்டவா ?

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர். 

PTR facing Nirmala Sitharaman face to face again. Lord, what happen is going to this meet?
Author
Chennai, First Published Jun 12, 2021, 12:03 PM IST

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாகப் பரவி வருவதால் சிகிச்சைக்குப் பயன்படும் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. 

PTR facing Nirmala Sitharaman face to face again. Lord, what happen is going to this meet?

அதே வேளையில் கொரோனா தொற்றுக்கான மருந்துகள், தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்குச் சலுகைகளை அளிப்பதன் வாயிலாக அவை இன்னும் குறைவான விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து முன் வைக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்துப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு இறக்குமதிக்கான சுங்கத் கட்டணத்தையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டர், கிருமிநாசினி, அத்தியாவசிய மருந்து பொருட்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு சேவை வரியை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. PTR facing Nirmala Sitharaman face to face again. Lord, what happen is going to this meet?

அந்த குழுவில் மேகாலய நிதியமைச்சர் கான்ராட் சங்மா தலைமை வகித்தார். மேலும் அந்த குழுவில், கேரளம், உத்தர பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த குழு அளித்த அறிக்கை தொடர்பாகவும் இன்று நடைப்பெறும் ஜி.எஸ்.டி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்சமயம் கொரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி வரியும், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களுக்கு 12% ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுவருகிறது. எனவே இன்றைய கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேற மாநில அரசுகள், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், பரிசோதனை கருவிகள், கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கான சிகிச்சை மருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது வரி விதிப்பை தவிா்க்க வேண்டும் என்று கூட்டாக வலியுறுத்தும் எனஎதிர்ப்பார்க்கப்படுகிறது. 

PTR facing Nirmala Sitharaman face to face again. Lord, what happen is going to this meet?

மேலும் தமிழகத்துக்கான இழப்பீட்டு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படும். ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நடைப்பெற்ற  ஜி.எஸ்.டி. கூட்டத்திலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4 ஆயிரத்து 321 கோடி நிலுவை தொகையை ஒரே தவணையில் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் இது கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் நிதிசுமையை குறைக்க மாநிலத்திற்கு பேருதவியாக இருக்கும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதேப்போல தமிழ்நாட்டிற்கு 2020-21ம் ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கு ரூ.12,258.94 கோடி இழப்பீடு வழங்கவேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios