protest in front of edappadi room in delhi

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில், முதலமைச்சர் எடப்பாடி தங்கியுள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு விலங்கு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச நேற்று மாலை விமானம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு முதலமைச்சர் தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்த மனுவை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக அரசுக்கு தேவையான திட்டங்கள் குறித்து மனு அளித்துள்ளோம் எனவும் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து முதலமைச்சர் தங்கும் அறைக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார். அப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள அறையின் முன்பு விலங்கு ஆரவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.