சபாநாயகர் தனபால் போட்டியிட்டு வேற்றி பெற்ற அவினாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கல்வீசி தாக்கப்பட்டது.
இதே போன்று தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் பல இடங்களில் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டு தாக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர செயலாளர் சாரதி தலைமையில் நூற்றுகணக்கானோர் திரண்டு பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே ஒன்று ஆம்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களிலும் சபாநாயகருக்கு எதிராகவும் சசிகலாவுக்கு எதிராகவும் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர், புதுகோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும் சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்றன.

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டன.

இதே போன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
