Asianet News TamilAsianet News Tamil

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்... அறிவித்தார் அமைச்சர் பொன்முடி!!

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நாளை  போராட்டம் நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

protest across tamilnadu tomorrow against imposition of hindi says minister ponmudi
Author
First Published Oct 14, 2022, 6:45 PM IST

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நாளை  போராட்டம் நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது தமிழகம், கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியதோடு இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதையும் படிங்க: நெல் ஈரப்பத அளவு 22% ஆக அதிகரிக்க வாய்ப்பு.. தமிழகத்திற்கு மத்திய குழு வருகை..

இந்த நிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் நாளை  போராட்டம் நடைபெறும் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும். மீண்டும் வரலாறு திரும்பாமல் இருக்கும் சூழல் ஏற்பட வேண்டும்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு.. அக்.28 வரை இளைஞருக்கு நீதிமன்ற காவல்!!

இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை அல்ல. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் ரூ.23.20 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதது. நிரந்தர பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் நடைமுறை விரைவில் தொடங்கும். உரிய தகுதி பெற்றவர்களே பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios