மக்களவை தேர்தலில் அமமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார். 

அதன்படி, ‘’தமிழகத்தில் இனிமேல் மதுபான உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை, கொள்கை முடிவு எடுக்கப்படும். பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும். 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம் ஏற்படுத்தப்படும். முதியோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000த்திலிருந்து ரூ.2000ஆக உயர்த்தப்படும். 60 வயது முதிர்ந்த ஆண், பெண், விவசாய தொழிலாளர்கள், நெசவாளர்களுக்கு மாதம் ரூ. 4000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அமமுக பாடுபடும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அமமுக பாடுபடும். விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அமமுக பாடுபடும்.

அப்படி மாற்றுவதால் மத்திய அரசால் கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும் கவனம் செலுத்துவோம்.  விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும், தொழிற்சாலையையும் டெல்டா மாவட்டங்களில் அமைக்க நிரந்தர தடை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்; டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலம் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை. அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி , மதுரைக்கு விரிவாக்கம் செய்யப்படும். சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை, நீட் தேர்வு ரத்து செய்யப்படும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அமமுக பாடுபடும். மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமமுக அறிவித்துள்ள இந்த திட்டங்களில் முக்கியமானவை அதிமுக- திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை.