சீமானை போல ஒரு மோசமான அரசியல் வாதியை  இதுவரை நான் கண்டதில்லை என சமூக செயற்பாட்டாளரும் பேராசிரியையுமான சுந்தரவல்லி பகிரங்கமான குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஊடக விவாதங்களில் தோன்றி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் , பெரியாரிய கருத்துக்களையும் முன் வைத்து போசக்கூடிவர் பேராசிரியர் சுந்திரவல்லி. இவர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், தன்னைப் சமூகவலைதளங்களில் சிலர் ஆபாசமாக பேசி தொடர்ந்து இழிவு படுத்தி வருவதாகவும்  தன்னை ஒரு பெண் என்றும் பாராமல்,  நாகூசம் வகையில் மிகத் தவறாக,  சித்தரித்து ஆபாச வீடியோ வெளியிட்டுள்ளனர் என அதில் குற்றஞ்சாட்டினார்.  அத்துடன் சில நிர்வாண புகைப்படங்களில் என் முகத்தையொட்டி அதை சமூக வலைதளத்தில் பரப்புகின்றனர். நான் விபர்ச்சார வழக்கில் கைதானதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது சமூகத்தில் எனக்குள்ள நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பதுடன் தனிப்பட்ட முறையில் என்னை கடும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.  என்னை வன்மத்துடன் தாக்கிவரும் நபர்களை கண்டறிந்து அவர்களை பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று  அவரின் புகார் மனுவில் குறிப்பிடபட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். தன்னை இப்படி ஆபாசமாக பேசுபவர்கள் வேறு யாரும் இல்லை நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள்தான் என்று  குற்றம்சாட்டி பரபரப்பூட்டினார்.

தொடர்ந்து திராவிடர் கழகத்தையும் பெரியாரின் கருத்துக்களையும் மேடைதோறும் கடுமையாக  சீமான் விமர்சித்து வரும் நிலையில், அவரையும், அவரின் அரசியல் உள்நோக்கத்தையும்  நான் தோலுரித்து வருகிறேன். அத்துடன் திராவிடர் கழகத்தையும், பெரியாரின் கொள்கைகளையும் உயர்த்தி பிடித்து பேசுவதை சீமானாலும் அவரின் தம்பிகளாலும்  பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார். அதனால்தான் என்மீது நாம் தமிழர் கட்சியினர் இவ்வளவு வன்னமமாக நடந்து கொள்கின்றனர்.என்னை ஆபாசமாக பேசி பதிவிட்டு வருபவர்கள் யார்,அவர்களின் பின்னணி என்ன, அவர்களின் இணையதள ஐடி போன்ற ஜாதகத்தை கையில் வைத்துக்கொண்டுதான்  இக்குற்றச்சாட்டை வைக்கிறேன் என்றார்.  

இது தொடர்பாக  பெண்களை போற்றி மதிப்பதே நம் தமிழர் மரபு என்று மூச்சுதிணற மேடைகளில் பேசும் சீமானிடத்தில் உங்கள் தம்பிகள் செய்வது சரிதான என நியாயம் கேட்க பல முறை தொடர்பு கொண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என் புகாரை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன் , அந்த செய்தியை அவர் பார்த்த பின்னரும் , அதற்கு பதிலேதும் கூறாமல் உதாசினப்படுத்தியுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது. சீமானின் லட்சணம் என்னவென்று,  மேடையில் தமிழ் சகோதரிகளே என்று முழங்கும் சீமான் இந்த சகோதரியின் புகாருக்கு ஏன் பதில் கூற மறுக்கிறார்.  அவர் பேசுவது அத்தனையும் நடிப்பு, நாடகம் என்று விமர்சித்த சுந்தரவல்லி,  சீமான் இத்தனை வன்மம் கொண்டவராக இருப்பார் என்று நான் எண்ணிப்பார்க்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்.