2000 ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்கு தான் பிரச்சனை… அண்ணாமலை கருத்து!!
விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். கள்ளில் வருமானத்திற்கும் வழி உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை கள்ளால் எப்படி ஈட்டு கொடுக்க முடியும் என்பதை வெள்ளை அறிக்கையில் உள்ளது. வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும்.
இதையும் படிங்க: கர்நாடக தேர்தலில் கலைந்த கனவுகளும் பூனையாக மாறிய சிங்கமும்!
அந்த மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும். 1985 க்கு பிறகு கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு பாஜகவின் மீது உள்ள சலிப்புத்தன்மையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் இலவசம். சித்தராமையா இலவசத்தில் மூன்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டு விட்டு வேறு செய்கின்றனர். அறிக்கையை மாற்றிவிட்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்... வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!
பாஜக அரசு பொருளாதாரமான நாட்டை கொடுத்து சென்றதால் கர்நாடகாவில் பட்ஜெட் நன்றாக இருக்கிறது. பாஜக அரசு நடத்தியதை வைத்து தான் பட்ஜெட் சித்தாராமையா போடுகிறார். 2000 ரூபாய் நோட்டு புழகத்தில் இல்லை. 2000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள். 2000 ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்கு தான் பிரச்சனை. டாஸ்மார்க்கை, கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டியை, எலக்ட்ரிக்சிட்டி பில் கட்டும் இடங்களை மத்திய அரசு மானிட்டரி செய்ய வேண்டும். உதயநிதி ஸ்டாலின் மணி லான்டர். இது குறித்து கேள்வி கேட்டால் பத்திரிக்கையாளர்களிடம் சிரித்து செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.