Asianet News TamilAsianet News Tamil

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை.. கையும் களவுமாக சிக்கிய 7 போலீஸ்.. இறுதியில் நேர்ந்த கதி..!

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Privilege for Pollachi sexual assault case accused...7 police suspended
Author
Coimbatore, First Published Oct 21, 2021, 1:19 PM IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகள் அவர்களின் உறவினர்களை சந்திக்க சலுகையளித்த விவகாரத்தில் சேலம் ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ உட்பட 7 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதிஷ்  ஆகிய 5 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பொள்ளாச்சி நகர மாணவர் அணி அதிமுக முன்னாள் செயலாளரான அருளானந்தம், பாபு, ஹேரேன்பால், அருண்குமார் ஆகியோர் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர். 

Privilege for Pollachi sexual assault case accused...7 police suspended

இந்த வழக்கு நேற்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சேலம் சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் வேனில் கோவைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியம் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அவர்களை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்தனர். 

போலீஸ் வேனை பின் தொடர்ந்து கைதிகளின் உறவினர்கள் வந்துள்ளனர். திடீரென அவர்களுக்காக போலீஸ் வேன் கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் நடுரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் வண்டியில் இருந்து இறங்கி வந்து உறவினர்களை கைதிகள் சந்தித்து பேசினர். இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு போலீசார் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Privilege for Pollachi sexual assault case accused...7 police suspended

இந்நிலையில் இது தொடர்பாக சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios