prison extended for ttv dinakaran

அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், கடந்த சில சாட்களுக்கு முன் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, இடை தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார். இதனால், அவர் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் டிடிவி.தினகரனை 5 நாள் கஸ்டடியில் எடுத்த போலீசார், சென்னைக்கு அவரை அழைத்து வந்தனர். அவரது வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களில் சோதனை நடத்தினர்.

பின்னர் கேளரா, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதைதொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக டிடிவி.தினகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், டிடிவி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரா ஆகியோர் பேசிய ஆடியோ தங்களிடம் உள்ளது. அதனை ஆய்வு செய்ய குரல் பதிவு நடத்த வேண்டும் என கேரிக்கை வைத்தனர். இதற்கு, டிடிவி.தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது டிடிவி.தினகரனிடம், சிறையில் இருந்தபடி வீடியோ காரன்பரஸ் மூலம் விசாரணை நடந்தது.

இதையொட்டி டிடிவி.தினரகன் மற்றும் சுகேஷ் சந்திரா ஆகியோரிடம் குரல் பதிவு செய்ய வேண்டும் என மீண்டும் போலீசார், குரல் பதிவு செய்ய அனுமதி கேட்டனர். அதற்கு சுகேஷ் சந்திரா எதிர்ப்பு தெரிவித்தார்.

இதைதொடர்ந்து நீதிபதிகள், டிடிவி.தினரகனுக்கு வரும் 29ம் தேதி வரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.