மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பிறகு மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உட்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

முன்னதாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தபோது, பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். எந்த உதவிகளையும் செய்ய தயார் என்று ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 

அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை அருகே உள்ள ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்து, அங்கிருந்து காரில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு சென்றார். பிறகு கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். 

அவர்களை தொடர்ந்து பகல் 12.35 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 12.45 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்த வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி ஆகியோர் 12.40 மணிக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதியம் 2.20க்கு சென்னை வருகிறார்.