T.Balamurukan டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி முதல்வராக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட கெஜ்ரிவால் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கிறார்.டெல்லி வடகிழக்குப் பகுதியில்  இந்திய குடியுரிமைச்சட்ட ஆதரவாளர்களுக்கும்,எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து, இந்த சந்திப்பின் போது விவாதிக்க கூடும் என்று தெரிகிறது.  

T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி முதல்வராக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட கெஜ்ரிவால் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கிறார்.டெல்லி வடகிழக்குப் பகுதியில் இந்திய குடியுரிமைச்சட்ட ஆதரவாளர்களுக்கும்,எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 40க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் குறித்து, இந்த சந்திப்பின் போது விவாதிக்க கூடும் என்று தெரிகிறது.

 கடந்த வாரம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.ஆனால் பிரதமர் மோடி, தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு சென்று விட்டார். கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இருந்த போதிலும், டுவிட்டர் வாயிலாக கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் பிரதமர் மோடி.