பிரதமர் மோடி பங்கேற்கும் வானவில் பன்னாட்டு பாரதி திருவிழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் பன்னாட்டு பாரதி திருவிழா- 2020 இணையவழியில் (யூ-டியூப்) டிசம்பர்11-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பாரதியாா் பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாரதி திருவிழா தொடங்கவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் மோடி பங்கேற்று, பாரதி ஆய்வறிஞா் சீனி.விசுவநாதனுக்கு பாரதி விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

இந்நிலையில், இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க நல்லி குப்புசாமி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்த தொழிலதிபரும்,  வானவில் பன்னாட்டு மையத்தின் புரவலர் என்ற முறையில் நல்லி குப்புசாமி செட்டியார் அழைப்பு விடுத்துள்ளார். 
 

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ரஜினி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த சூழலில் ரஜினி மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.