கொரோனா வைரஸ் கோரப்பிடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் அதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது, பாரத பிரதமர் இரவு பகல் பாராமல் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் , தற்போதுள்ள கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான வாசுதேவன் என்ற தன் பழைய நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் மோடி ,  இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  கோவை துடியலூர் சேர்ந்தவர் வாசுதேவன்(80) அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 1958 இல் இருந்து தற்போது வரையில் பாஜகவின் உறுப்பினராக இருந்து வருகிறார் .  இதில் இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கான ஒரு மகிழ்ச்சி சம்பவம் நடந்தது

அதாவது அன்று காலையில் அவரது தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது அதில் பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் உங்களுடன் பேச இருக்கிறார் நீங்கள் தயாராக இருங்கள் என்று ஒரு குரல் சொன்னது, இதில் வாசுதேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை , ஆச்சரியத்தில் உறைந்தார்,  பிறகு சிறிது நேரம் கழித்து வணக்கம் என்று தமிழில் பிரதமரின் குரல் கேட்டதும் மகிழ்ச்சியில் உறைந்த வாசுதேவன் நமஸ்தே ஜி என்று பதிலளித்தார்  வாசுதேவனிடம் நலம் விசாரித்த பிரதமர் ஞாபகம் இருக்கிறதா 1980-ஆம் ஆண்டு நாம் இருவரும் ஒன்றாய் டெல்லி நோக்கி பயணம் செய்துள்ளேன் என்று பிரதமர் மோடி கேட்க,  ஆமாம் ஆமாம் ஞாபகம் உள்ளது அப்போது டெல்லியில் நடந்த தேசிய மாநாட்டிற்கு சென்றுகொண்டிருந்தோம் அன்று நாம் இருவரும் நிறைய பேசினோம் என்றார்.  நீங்கள்தான் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்று பிரதமர் இந்தியில் சொல்ல,  ஆமாம் ஐயா 1958ல் இருந்து உறுப்பினராக உள்ளேன் என்றார் வாசுதேவன் .  பின்னர் வாசுதேவனிடம் நலம் விசாரித்து விட்டு இந்த கொரோனா சீற்றத்தை சரிசெய்த பின்னர் உங்களிடம் நான் மீண்டும் பேசுகிறேன்  என்று கூறி விடைபெற்றார் மோடி.

இந்நிலையில் பிரதமர் மோடி நலம் விசாரித்தது குறித்து  வாசுதேவடினம்,  ஊடகங்கள் அணுகியபோது அவர் தெரிவித்ததாவது :- பாஜகவின் குஜராத் மாநில அமைப்பு செயலாளர் என் நண்பர்,  அவர் மூலமா எனக்கு மோடிஜி 1980 ஆம் ஆண்டு அறிமுகமானார்,  அதன்பின்னர் பாஜகவின் குஜராத் அமைப்பு செயலாளராக பொறுப்பேற்றார் அந்த ஆண்டில் டெல்லியில் கட்சியின் தேசிய மாநாடு நடைபெறவிருந்தது நான் அப்போது தேசிய குழு உறுப்பினர்களில் ஒருவராக அதில் கலந்துகொள்ள ரயிலில் சென்றேன் அப்போது ரயில் பெட்டியில் எனக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் மோடி அவர்களும் என்னுடன் பயணம் செய்தார் ,  நானும் மோடி அவர்களும் எதிரெதிர் சீட்டில் அமர்ந்தபடி பேசிக்கொண்டே டெல்லிக்கு பயணித்தோம் ,  என்னிடம் தமிழ்நாட்டைப் பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள்  திக திமுக அதிமுக எவ்வாறு தோன்றியது என்று கேட்டபடி பயணம் செய்தார் . இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின்னர் மோடி தன்னை நலம் விசாரித்திருப்பது முற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என கூறி வாசுதேவன் நெகிழ்ந்தார் .