உலக நன்மைக்கான பிரதமர் மோடியின் தொலை நோக்கு பார்வை தன்னை திகைக்க வைத்தது எனவும் அவரது சந்திப்பு உத்வேகத்தை அளித்தது எனவும் ஜைடஸ் குழுமத்தில் தலைவர், பங்கஜ் ஆர்.படேல் தெரிவித்துள்ளார். 

திட்டமிட்டபடி அகமதாபாத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பூசி உற்பத்தி  செய்யும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய பிரதமர் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் அவர் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதற்க்காக அவர் அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். முன்னதாக இன்று காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்து சேர்ந்த அவர், அங்கு  சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடல் காடிலா நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அங்கு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். அங்கு அந்நிறுவனம் தயாரிக்கும் ஜைகோவ்-டி  என்ற தடுப்பூசியின் இரண்டாவது கட்ட பரிசோதனையை குறித்தும் விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் இது குறித்து  ஜைடஸ் குழுமம், ஜைடஸ் குழுமத்தில் தலைவர் மற்றும் அக்குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் டுவிட்டரில் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அதில் பிரதமரின் வருகை குறித்து தெரிவித்துள்ள ஜைடஸ் நிறுவனம், மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஜைடஸ் பயோடெக் பூங்காவில் ஜிகோவ்-டி அதாவது இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி தயாரிப்பை பார்வையிட்டார். சவாலான இந்த தொற்று நோய் காலத்தில் பிரதமரின் தலைமை மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை பாராட்டுக்குரியது. ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவதில் பிரதமருடன் இணைந்து ஜைடஸ்சும் தன்னை அற்பணித்துக்கொள்கிறது. மருந்து தயாரிப்பிற்கு உறுதுணையாக இருந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், முன்னணி களப்பணியாளர்கள், மற்றும் நோயாளிகளை வெகுவாக பாராட்டுகிறோம், என தெரிவித்துள்ளது. 

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஜைடஸ் குழுமத்தில் தலைவர், பங்கஜ் ஆர்.படேல், உலகளாவிய நன்மைக்கான பிரதமர் மோடியின் விஞ்ஞான அறிவு மற்றும் அவரது தொலைநோக்கு பார்வை என்னை திகைக்கவைத்தது, அவரது சந்திப்பு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அவரது பார்வை ஒட்டுமொத்த உலக நன்மைக்கானது. இந்தியாவின் இந்த கோவிட் தடுப்பூசி ஒட்டுமொத்த உலகளாவிய நன்மைக்காக அர்பணிக்கப்படும், மிகப் பெரிய மனித குளத்திற்கு பயனளிக்கும். இவ்வாறு அவர் உறுதியளித்துள்ளார். 

இது குறித்து தெரிவித்துள்ள ஜைடஸ் குழுமத்தில் மேலாண்மை இயக்குனர். மருத்துவர் ஷார்வில் படேல், எங்களது ஜைடஸ் பூங்காவிற்கு பிரதர் மோடியை வரவேற்று கவுரவித்தோம், கோவிட் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் உற்பத்தியை அவர் ஆய்வு செய்தார், கொரோனா அற்ற சமூகத்தை படைக்கவும், தடுப்பூசி உற்பத்தி மேம்பாட்டுக்காகவும் பலனுள்ள பல தகவல்களை அவர் வழங்கினார், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.