Asianet News TamilAsianet News Tamil

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்றால் தான் கூட்டணி! ஸ்டாலினுக்கு செக் வைக்கும் திருநாவுக்கரசர்!

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் தமிழகத்தில் கூட்டணி வைக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் பிரதமர் மோடிக்கு எதிரான ஒரு வலுவான பிரதமர் வேட்பாளரை நிறுத்தும் முடிவில் எதிர்கட்சிகள் மும்முராக பணியாற்றி வருகின்றன.

Prime Minister candidate rahul gandhi Alliance; Stalin check Thirunavukkarasar

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் தமிழகத்தில் கூட்டணி வைக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் பிரதமர் மோடிக்கு எதிரான ஒரு வலுவான பிரதமர் வேட்பாளரை நிறுத்தும் முடிவில் எதிர்கட்சிகள் மும்முராக பணியாற்றி வருகின்றன. பிரதமர் வேட்பாளரை விட்டுக் கொடுத்து கூட அனைத்து மாநிலங்களிலும் கூட்டணியை பலமாக்கும் திட்டத்தில் ராகுல் இருக்கிறார். Prime Minister candidate rahul gandhi Alliance; Stalin check Thirunavukkarasar

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போரில் தமிழர்களை கொத்து கொத்தாக இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதற்கு அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தான் காரணம் என்கிற ஒரு புகார் உள்ளது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் தலைவரான ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் வாக்கு வங்கியை தி.மு.க கூட்டணி இழக்க நேரிடும். எனவே தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தி.மு.க தயக்கம் காட்டுகிறது. மேலும் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோவம் கூட ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கமாட்டார் என்றே கருதப்படுகிறது.Prime Minister candidate rahul gandhi Alliance; Stalin check Thirunavukkarasar

 இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அண்மையில் எஃப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழகத்தை பொறுத்தவரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்று தெரிவித்தார். திருநாவுக்கரசர் கூறியுள்ளதை தி.மு.க, ம.தி.மு.க போன்ற கட்சிகள் எப்படி எடுத்துக் கொள்ளப்போகின்றன என்பது போகப்போகத்தான் தெரியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios