குடியரசு தலைவர் தேர்தல்.. ஸ்டாலின் தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனை.. திமுகவின் திட்டம் என்ன?

 திமுகவுக்கு மட்டும் 63 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு மதிப்பு உள்ளது. எனவே, திமுகவின் வாக்குகளை எதிர்க்கட்சிகள் முக்கியமாகப் பார்க்கும் நிலையில் ஆளும் பாஜகவும் திமுகவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.  

Presidential election .. Stalin's consultation .. What is the DMK's plan?

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.

புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆளும் பாஜக, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளது. இதேபோல எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக 22 எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதற்காக கூட்டம் ஒன்றை டெல்லியில் மம்தா பானர்ஜி நாளை நடத்த உள்ளர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும்படி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்புக் கடிதமும் அனுப்பியுள்ளார். 

Presidential election .. Stalin's consultation .. What is the DMK's plan?

இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுகவும் தனியாக கட்சி நிர்வாகிகளுடன் முதல் கட்ட ஆலோசனையை நடத்தி முடித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, கே. பொன்முடி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ. ராசா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், மாநிலங்களவையில் 10 எம்.பி.களுடன் திமுக முக்கியமான எதிர்க்கட்சியாக இருக்கிறது. எனவே, திமுக குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கியமான பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பக்கடும் சூழலில் இந்தக் கூட்டத்தை ஸ்டாலின் நடத்தியிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் சுமார் 10 லட்சம் வாக்கு மதிப்புகள் உள்ளன. இதில் திமுகவுக்கு மட்டும் 63 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு மதிப்பு உள்ளது. எனவே, திமுகவின் வாக்குகளை எதிர்க்கட்சிகள் முக்கியமாகப் பார்க்கும் நிலையில் ஆளும் பாஜகவும் திமுகவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.  இதுபற்றியெல்லாம் திமுக மூத்த நிர்வாகிகள் கேள்விகள் எழுப்பியதால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் மம்தா பானர்ஜி கூட்டும் கூட்டத்துக்கு திமுக சார்பில் பிரதிநிதியை அனுப்பவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

Presidential election .. Stalin's consultation .. What is the DMK's plan?

குடியரசுத் தலைவர் தேர்தலில் மெஜாரிட்டியைப் பெற பாஜகவுக்கு சுமார் ஒன்றரை சதவீத வாக்குகள் குறைவாக இருக்கின்றன. இதுபற்றியும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. ஆனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜ்னதாதளம் ஆதரவுடன் பாஜக அந்த வாக்குகளைக் கடந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. என்றாலும் இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலிமையைக் காட்டும் வகையிலும் நெருக்கடி அளிக்கும் வகையிலும் போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்று முக்கியமான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. திமுகவும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios