Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் களத்தில் கபடி ஆடும் கொரோனா... கதறும் தேமுதிக நிர்வாகிகளின் கோரிக்கையை காதில் கூட வாங்காத பிரேமலதா..!

கடலூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரோனா பரிசோதனை செய்ய பிரேமலதாவை அதிகாரிகள் அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Premalatha who refused the corona test
Author
cuddalore, First Published Mar 24, 2021, 1:30 PM IST

கடலூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கொரோனா பரிசோதனை செய்ய பிரேமலதாவை அதிகாரிகள் அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விருத்தாச்சலம் தொகுதியில், தேமுதிக சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவரது சகோதரர் சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பிரேமலதாவுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய பிரேமலதாவுடன், சதீஷ் சென்றார். இதனிடையே, சுதீஷ் அவரது மனைவி மற்றும் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மாநில நிர்வாகி பார்த்தசாரதி கொரோனா அறிகுறிகளுடன், சித்த மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

Premalatha who refused the corona test

இந்நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பிரேமலதாவும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் நேரில் வந்து அழைத்தனர். ஆனால், பிரச்சாரத்தை திசை திருப்ப முயற்சிப்பதாகவும், பிற்பகலில் சோதனை செய்து கொள்வதாகவும் பிரேமலதா கூறினார். 

Premalatha who refused the corona test

இது தொடர்பாக விருத்தாசலம் சுகாதார அதிகாரிகள் கூறுகையில்;- உறவினருக்கு கொரோனா உறுதியானாதால் பிரேமலதாவை பரிசோதனை செய்ய நேரில் அணுகினோம். ஆனால், பிரச்சாரம் செய்வதாக கூறி கொரோனா பரிசோதனை செய்ய மறுத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios