premalatha vijayakanth comments against Rajinikanth political entry
பத்திரிகையாளர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது, கொள்கை என்னவென்று கேட்டாலே தலை சுற்றுகிறது என்கிறவங்க வீட்டில் இருக்க வேண்டியது தானே? என ரஜினியின் ஆன்மீக அரசியல் அறிவிப்பிற்கு பிரேமலதா விஜயகாந்த் பதுமையாக விமர்சித்துள்ளார்.
கடலூரில் நேற்றுதேமுதிகசார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய பிரேமலதா விஜயகாந்த் ஆன்மீக அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த்; யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் விஜயகாந்தை மாதிரி தைரியமாக களத்தில் இறங்கி மக்களுக்காக போராடக்கூடிய வீரராக வர வேண்டும்.
.jpg)
சும்மா அரசியலுக்கு வரேன் என பில்டப் விடாமல், மக்கள் பிரச்சினைகளை அறிந்து போராட வேண்டும். மைக்கை பார்த்தாலே பயமாக இருக்கிறது, பத்திரிகையாளர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது, உங்கள் கொள்கை என்ன என கேட்டாலே தலை சுற்றுகிறது என சொல்கிறவர்கள் வீட்டில் இருக்க வேண்டியது தானே? ஒரு ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவிட்டரில் ஃபேஸ்புக் என ஆட்சி செய்ய முடியாது. உங்களை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
இதுவரை பெரிய அளவில் இப்படி யாரும் விமர்சிக்கத நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை இப்படி கண்டபடி கிழித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
