Asianet News TamilAsianet News Tamil

”ஒன்றியம் - திராவிட மாடல்” வார்த்தையால் ஒரு பிரோஜனம் இல்லை.. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..

"ஒன்றியம், திராவிட மாடல் போன்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை" என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Premalatha Vijayakanth attacks DMK government
Author
Tamilnádu, First Published May 28, 2022, 6:41 PM IST

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்த பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த ஓராண்டில் எந்த சாதனையும் புரியவில்லை என்றும் தமிழகத்தில் ஆட்சி தான் மாறியுள்ளதே தவிர காட்சி ஏதும் மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். திமுகவை பொருத்தவரை எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர். திராவிட மாடல், ஒன்றியம் எனும் வார்த்தைகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறினார்.

மேலும் படிக்க: அடத்தூ.. 2 வருஷம் ஆகியும் குழந்தை இல்லை.. மனைவியை தன் சகோதரனிடம் ஒப்படைத்த கணவன்.. 3 ஆண்டுகள் வன்புணர்வு.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை தலைவிரித்தாடுகிறது. எனவே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. விசாரணைக்கு அழைத்து செல்லும் கைதிகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன. 
கோவை சாய்பாபா காலனி அவைத் தலைவர் ரமேஷின் மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துக்குக் காரணம் போக்குவரத்து விதிமீறல். குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் கனரக வாகனங்கள் இயங்குவதே காரணம். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. ஆனால் இங்கு சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரி செய்யப்படவில்லை.  அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கொலுசு, பணம் அளித்ததை தவிர வேறென்ன செய்தார் என மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார். திமுக வந்தவுடன் ஒரு தெருவுக்கு 10 டாஸ்மாக் திறக்கப்படுகிறது என்று கூறிய அவர், மக்கள் தெளிவானால்தான் எல்லாமே இங்கு மாறும் என்றார்.

மேலும் படிக்க: பொய் வழக்கு போடுவதா..? இதோடு உங்க அடாவடியை நிறுத்தி கொள்ளுங்கள்.. எடப்பாடி எச்சரிக்கை..

Follow Us:
Download App:
  • android
  • ios