கனிமொழி என்றாலே 2ஜி ஊழல்தான் அனைவரின் நினைவுக்கு வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடுமையாக விமர்சித்துள்ளார். 

கனிமொழி என்றாலே 2ஜி ஊழல்தான் அனைவரின் நினைவுக்கு வரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கடுமையாக விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடி மக்களவை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கோவில்பட்டியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், ’’மீன்பிடி தொழிலை நவீனமாக்கி மீனவர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்துவோம். வர்த்தக மையம் அமைத்து வியாபாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம். பாரதிய ஜனதா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வரப்போவதால், இங்கு தமிழிசை சவுந்தரராஜனை வெற்றி பெற்றால் கண்டிப்பாக மத்திய அமைச்சராவார். அப்போது இந்த தொகுதிக்கு வேண்டிய அனைத்து வாய்ப்புகளையும் அவர் நிச்சயமாகப் பெற்றுத் தருவார். ஆனால், வெற்றி பெறாத ஒருவருக்கு நீங்கள் வாக்களித்தால், வெறும் டெல்லிக்குச் செல்ல பயணச்சீட்டு செலவு தான் வீணாகும்.

தொலைக்காட்சிகளில் கருத்துக் கணிப்பு என்று வருவதெல்லாம் பொய். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்து மக்களைக் குழப்பிக் கொண்டிருப்பவர்களைப் நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழுக்கு யார் துரோகம் செய்தார்களோ அவர்களுக்கு மக்கள் நிச்சயமாகத் துணை நிற்க மாட்டார்கள். தமிழ், தமிழ் என்று சொல்லி இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பதை யாரும் மறக்கவில்லை. அவர்களுக்குத் தக்க பாடத்தை இத்தேர்தலில் மக்கள் கொடுக்க வேண்டும். 

திமுக என்றவுடன் நில அபகரிப்பு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறுநில மன்னர்கள் போல் அமைச்சர்கள் அமர்ந்து கொண்டு கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் என அனைத்தையும் செய்து வந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வரக் காரணம் திமுக. அதனைத் தடுத்தது அதிமுக. அதேபோல், கெயில், நியூட்ரினோ என நாட்டுக்குத் தேவையில்லாத அனைத்தையும் கொண்டு வந்தவர்கள் திமுக. கனிமொழி என்றாலே 2ஜி ஊழல்தான் அனைவரின் நினைவுக்கு வரும். நாட்டுக்குத் தேவையானவற்றைக் கொண்டு வந்தது அதிமுக - தேமுதிக - பா.ஜ.க. கூட்டணி’’ என அவர் தெரிவித்தார்.