நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட  தேமுதிக வெற்றி பெறவில்லை. தேமுதிகவின் வாக்குவங்கியும் மொத்தமாக சரிந்த நிலையில், அடுத்து நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் தற்போதுள்ள கூட்டணி தொடரும்,  தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எந்ததெந்த இடங்களில் தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது, அதுவும் வட மாவட்டம் வறண்டு போயுள்ளதால் காஞ்சிபுரத்தில் தேமுதிக சார்பில் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பிரேமலதா விஜயகாந்த்;  தேமுதிக சார்பில் குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகித்தோம். தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது வேதனையாக உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்தால் தண்ணீர் பிரச்சனை வராது. பிரதமர் மற்றும்  முதல்வரிடம் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசுவோம் என்றும் பிரேமலதா கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் ஏற்கனவே அறிவித்தப்படி உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்து  வரும் தேர்தல்களிலும் தற்போதுள்ள கூட்டணி தொடரும் என்றார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் எந்ததெந்த இடங்களில் தேமுதிக போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளோப்பற்றி பேசிய அவர், அதிமுக உட்கட்சிபூசல் குறித்து நாம் கருத்துக்கூறக்கூடாது என  தெரிவித்தார்.