திமுகவுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் பணியாற்றும் நிலையில் பல்வேறு விவாதங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன.  பொய்யை பரப்பக்கூடாது எனவும் இப்போது ஒரு கருத்து உலா வருகிறது. 

’’தொழில்நுட்பம், குறிப்பாக இணைய தொழில்நுட்பம் பெருகிவிட்ட காலத்தில் பொய்யான செய்திகளை பொய் பிரச்சாரங்களை தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் விஷயங்கள் ஆகிவிட்டன. ஏதேனும் ஒரு வழியை பயன்படுத்தி வாக்காளர்களின் உணர்வுகளை தொடுவதற்காக அரசியல் கட்சிகளிடையே பெரும் போர் நடக்கிறது. 

தேர்தல் வெற்றிக்காக இரு சமுதாயங்களை ஒன்றுடன் ஒன்று மோத விடுவது தங்களின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எதிர் சமூகத்தை அச்சுறுத்தும் நோக்குடன் பொய்யான செய்திகளை பரப்புவது போன்றவை அரசியல் கட்சிகளின் அடிப்படை தேர்தல் உத்தி ஆகிவிடும் என பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பணியாற்றிய சிவம் சங்கர் சிங்  தெரிவித்துள்ளார். ஐபேக் நிறுவனம் இப்போது திமுகவுக்காக பணியாற்றி வருகிறது. 

இந்நிலையில் சிவம் சங்கர் சிங் கூறியுள்ள கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’சிவம் சங்கர் சிங் என்பவரின் கவனிக்க வேண்டிய கருத்து... இவர் ஐ-பேக் நிறுவனத்தில் பணியாற்றியவர்’எனத் தெரிவித்துள்ளார். அதாவது திமுக வெற்றி பெற இந்த யுக்தி கையாளப்படலாம் என ராமதாஸ் உணர்த்துவதை போல் பதிவிட்டுள்ளார்.