prakash raj tweet against bjp
நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய விழா மேடையை கோமியத்தை தெளித்து சுத்தப்படுத்திய பாஜக தொண்டர்களுக்கு பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசையும் மத்திய அரசின் செயல்பாடுகளையும் பிரகாஷ் ராஜ் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். அதனால் பாஜகவினரின் எதிர்ப்புகளையும் சந்தித்துவருகிறார். கௌரி லங்கேஷ் கொலை, மாட்டிறைச்சி தடை, பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் பிரகாஷ் ராஜ் விமர்சித்திருந்தார். பிரகாஷ் ராஜுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சிர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டேவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு அப்பகுதி பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்த பின், விழா நடந்த மேடையை பசுவின் சீறுநீரான கோமியத்தால் கழுவி சுத்தம் செய்தனர்.
சிலர் தங்களை அறிவாளிகள் எனக் கருதிக் கொண்டு பேசுகின்றனர். இவர்களது செயலால் இந்த பகுதியே அசுத்தமாகி விட்டது. எனவே இதனை புனிதமான கோமியத்தால் சுத்தம் செய்ததாக பாஜகவினர் கூறினர். பாஜகவினரின் இந்த செயலுக்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜகவினரின் இந்த செயலுக்கு பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">BJP workers cleaning and purifying the stage ..from where I spoke in Sirsi town ...by sprinkling cow urine (divine gomoothra)...🤭🤭🤭...will you continue this cleaning and purification service where ever I go..... <a href="https://twitter.com/hashtag/justasking?src=hash&ref_src=twsrc%5Etfw">#justasking</a> <a href="https://t.co/zG1hKF8P4r">pic.twitter.com/zG1hKF8P4r</a></p>— Prakash Raj (@prakashraaj) <a href="https://twitter.com/prakashraaj/status/953139520450396160?ref_src=twsrc%5Etfw">January 16, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதுகுறித்த தனது டுவிட்டர் பதிவில், சிர்சி நகரில் நான் பங்கேற்ற விழா மேடையை, கோமியத்தை தெளித்து பாஜக தொண்டர்கள் சுத்தம் செய்துள்ளனர். நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் நீங்கள் தொடர்ந்து இந்த சுத்திகரிப்பு மற்றும் புனிதப் பணியில் ஈடுபடவேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.
