Asianet News TamilAsianet News Tamil

பிரபாகரன் ஒரு இந்து தேசியவாதி.. வைகோ.. திருமாவளவன்.. சீமான்.. எங்கிருந்தாலும் வருக. அலறவிட்ட அர்ஜூன் சம்பத்.

பிரபாகரன் என்பவர் சைவ மதத்தை சேர்ந்தவர்,  எங்களைப் பொறுத்த வரையில் பிரபாகரன் ஒரு இந்து தேசியவாதி. அவர் திருப்போரூர் முருகன் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டவர்.  இந்துக்கள்தான் தாலி கட்டி திருமணம் செயவார்கள், கிறிஸ்தவர்கள் தான் மோதிரம் மாற்றுவார்கள். அவரது தந்தை வல்வெட்டி சிவன் கோவில் தர்மாகர்தாவாக இருந்தவர் ஆவார். 

Prabhakaran is a Hindu nationalist .. Vaiko .. Thirumavalavan .. Seeman .. Come from anywhere. Screaming Arjun Sampath.
Author
Chennai, First Published Dec 3, 2021, 5:38 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிரபாகரன் ஒரு இந்து தேசியவாதி அதனால் தாங்கள் அவரை ஆதரிப்பதாகவும், பிரபாகரனுடைய மதம் சைவ மதம் அவர் இந்து முறைப்படி திருப்போரூர் முருகன் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டவர் எனவே அவரை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.  அவருடைய பிறந்தநாளுக்கு பலர் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள், கிறிஸ்தவ முறைப்படி அவர்கள் அப்படி செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர் பிறந்த நாளில் விளக்கு ஏற்றி ஆலம்மணி ஓசை எழுப்பி கொண்டாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

நவம்பர் 26  உலகமெல்லாம் பரவிக்கிடக்கும் தமிழர்களால் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு நாள். தமிழீழ தேசிய தலைவராக போற்றப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள். சிறுவயது முதலே போர்க்குணத்துடன் இருந்தவர், பிற்காலத்தில் தமிழர்களுக்கு ஈழமண்ணில் நேர்ந்த கொடுமை கண்டு போர்க்களம் புகுந்தவர் அவர். அவரின் இயற்பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இந்தப் பெயரை உச்சரிக்காத தமிழர்களே இல்லை என்று கூறலாம். இலங்கையில் தமிழ் ஈழம் மலர முப்படை அமைத்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தியதால் மாவீரர் என்று அழைக்கப்படுகிறார். 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இனவெறி காரணமாக தமிழர்களை காரணமே இன்றி சுட்டு வீழ்த்தியது இலங்கை அரசு. அதை நேரில் கண்ட அவர் அன்று முதல் தமிழீழ சுதந்திர வேட்கை போரைத் தொடங்கினார். 

Prabhakaran is a Hindu nationalist .. Vaiko .. Thirumavalavan .. Seeman .. Come from anywhere. Screaming Arjun Sampath.

எனது மக்களின் விடுதலைக்காக போராட செல்கிறேன், இனி வீட்டிற்கு திரும்ப மாட்டேன் என்று காட்டுக்குள் படை கட்டினார் பிரபாகரன். அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவர் மாவீரன் என்றே அழைக்கப்படுகிறார். 2009ல் நடந்த இறுதி கட்ட போரில் புலிகள் அழித்தொழிக்கப் பட்டனர். பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் பல சர்வதேச நாடுகளில் இன்னும் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீட்டிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் புலிகள் தலைதூக்க கூடும் என்ற அச்சமே அதற்கு காரணமாகவும்  சொல்லப்படுகிறது.  முப்படை அமைத்து விடுதலை போர் செய்த இயக்கம் விடுதலைப்புலிகளை தவிர உலகில் வேறு எங்கும் இல்லை இன்று உலக நாடுகளே வியக்கும் அளவிற்கு வீரத்துடன் போரிட்டவர் பிரபாகரன். 

ஆண்டுதோறும் நவம்பர் 26 என்று அவரது பிறந்தநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விடுதலை சிறுத்தைகள், மே 17 இயக்கம், மதிமுக,  தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் இதுகுறித்து  இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் செய்தியாளரிடம் கூறுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, இந்து மக்கள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 , பிரபாகரன் பிறந்த தினம், நவம்பர் 27 மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது என்றார். இந்து மக்கள் கட்சி சார்பில் அவர் பிறந்த தினத்தில் கோவில்களில் விளக்கு ஏற்றி ஆலய மணி ஓசை எழுப்பி அவரது பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுகிறோம், ஆனால் சிலர் கேக் வெட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவ மதத்தாக்கத்தில் அப்படி கொண்டாடுகின்றனர். மே 17 தான் அப்படி செய்யும் ஆனால் நாங்கள் மாவீரர் தினத்தன்று திதி கொடுத்து மாவீரர்தின வழிபாட்டை வீர வழிபாடாக நடத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறோம், இந்த ஆண்டும் நடத்தினோம். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஏதோ வன்முறையை தூண்டும் வகையில் அது இருந்ததாக கூறி என்னுடைய முகநூல் பக்கம் ஒருவார காலம் வரை பிளாக் செய்யப்பட்டிருந்தது.

  Prabhakaran is a Hindu nationalist .. Vaiko .. Thirumavalavan .. Seeman .. Come from anywhere. Screaming Arjun Sampath.

இந்து மக்கள் கட்சியை பொறுத்த வரையில் நாங்கள் இந்து ஈழத்தை ஆதரிக்கிறோம். ஆனால் பாஜக வைப் பொருத்த வரையில் தமிழ் தேசியம் பார்வை என்பது வேறாக இருக்கலாம், அண்ணாமலையில் பார்வை வேறாக இருக்கலாம். ஆனால் நாங்கள் பிரபாகரனை ஆதரிக்கிறோம். பிரபாகரன் என்பவர் சைவ மதத்தை சேர்ந்தவர்,  எங்களைப் பொறுத்த வரையில் பிரபாகரன் ஒரு இந்து தேசியவாதி. அவர் திருப்போரூர் முருகன் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துக்கொண்டவர்.  இந்துக்கள்தான் தாலி கட்டி திருமணம் செயவார்கள், கிறிஸ்தவர்கள் தான் மோதிரம் மாற்றுவார்கள். அவரது தந்தை வல்வெட்டி சிவன் கோவில் தர்மாகர்தாவாக இருந்தவர் ஆவார். பிரபாகரன் நேதாஜி மீதும், கிருபானந்த வாரியார் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். ஒரு அர்ச்சகர் உயிரோடு எரிக்கப்பட்ட பார்த்த பின் தான் அவர் போராட்ட களத்திற்கு வந்தார் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios