Asianet News TamilAsianet News Tamil

Ramadoss: போலீசார் தாக்கியதே பிரபாகரனின் உயிரிழப்புக்கு காரணம்.. எரிமலையாய் வெடிக்கும் ராமதாஸ்.!

நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி  உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. காவல்துறையினர் தாக்கியதே  மாற்றுத்திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Prabhakaran death is due to police attack .. Ramadoss
Author
Tamil Nadu, First Published Jan 17, 2022, 2:38 PM IST

நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி  உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (45). மாற்றுத்திறனாளியான இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11-ம் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். 12-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென உயிரிழந்தார். 

Prabhakaran death is due to police attack .. Ramadoss

இது தொடர்பாக பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கலைவாணி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, நல்லிபாளையம் ஏட்டு குழந்தைவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி  உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார். 

Prabhakaran death is due to police attack .. Ramadoss

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:- நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி  உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. காவல்துறையினர் தாக்கியதே  மாற்றுத்திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 8-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படாமல் சேந்தமங்கலம் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வைத்து தாக்கப்பட்டிருக்கிறார். அதனால், சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் பிரபாகரனுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. பிரபாகரனின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios