பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைப்பு! என்ன காரணம் தெரியுமா? எல்.முருகன் சொன்ன தகவல்!
பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் இதுவரை தமிழக அரசியலில் எந்த கட்சியும் நடத்தாத அளவிற்கு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை மதுரையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் மத்திய பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றதோடு, திமுக அரசின் ஊழல்கள் மற்றும் தோல்விகளையும் கொண்டு சென்றுள்ளோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்திற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இந்த யாத்திரையின் மூலம் மத்திய பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றதோடு, திமுக அரசின் ஊழல்கள் மற்றும் தோல்விகளையும் கொண்டு சென்றுள்ளோம். இந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் சிறப்பான ஆதரவு கிடைத்தது.
இதையும் படிங்க: மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்வு கடைசியில் ரத்து.. அண்ணாமலை அப்செட்..!
பிரதமர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் இதுவரை தமிழக அரசியலில் எந்த கட்சியும் நடத்தாத அளவிற்கு பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை மதுரையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாளை காலை தூத்துக்குடியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் திருநெல்வேலியில் கட்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
கடந்த முறை மூன்று நாட்கள் பிரதமர் தமிழகம் வந்திருந்தார். தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதுமுள்ள பிரதமரின் பற்றுக்கு சான்றாக காசி தமிழ்ச் சங்கமும் நிகழ்ச்சி, சௌராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஆகியவை உள்ளன. அதேபோல் திருக்குறளை வெளிநாட்டு மொழி உட்பட 35க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. சபையில் முதல்முறையாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என தமிழில் பேசி பிரதமர் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவற்றோடு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக 11 லட்சம் கோடி வழங்கி தமிழகத்தை வேகமான முன்னேற்றம் அடைந்த மாநிலமாக உருவாக்கியுள்ளார். உலகத் தமிழர்கள் மத்தியிலும் பிற நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்படுகிறது. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் செங்கோலை ஆதீனங்கள் புடை சூழ பாராளுமன்றத்தில் நிறுவி தமிழ் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்தார். இவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்காகவும் செயலாற்றிய பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நாளைய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை முயற்சியால் பாஜக பெரிய வளர்ச்சியடைந்துள்ளது.. காணாமல் போகும் நிலையில் காங்கிரஸ்- விஜயதாரணி
பிரதமரின் ஆட்சி நிர்வாகத்தால் ஈர்க்கப்பட்டும், வளர்ச்சிக்கான அரசியலில் பங்கு பெற வேண்டும் எனவும் அனைத்து கட்சிகளை சேர்ந்த ஏராளமான பிரமுகர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். கோவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பாஜகவில் இணைவது குறித்து நடைபெறவிருந்த அறிவிப்பு நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது என எல்.முருகன் தெரிவித்தார்.