அதிமுக உறுப்பினர்களுக்கும், ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனுக்கு செல்பவர்களுக்கும் பூங்குன்றனை தெரியாமல் இருக்க முடியாது. போயஸ் கார்டனின் 'கேட்' என்று வர்ணிக்கப்பட்ட  பூங்குன்றன், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ கட்சிப் பத்திரிகையான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்' நாளிதழின் பதிப்பாளர், வெளியீட்டாளர் என்று ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் இருந்தவர்.

இது தவிர இன்னும் பிற சொத்துகளுக்கும் நிறுவனங்களுக்கும் பூங்குன்றன் 'சைனிங் அத்தாரிட்டி' பொறுப்பில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. போயஸ் கார்டனுக்குள் நுழைய முற்படும் கட்சியினர், வி.ஐ.பி-கள்  யாராயினும் அவர்கள், பூங்குன்றன் கண்ணில் பட்டே ஆகவேண்டும். 

ஏனெனில், பூங்குன்றனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை கார்டனின் வரவேற்பறையை ஒட்டியே அமைந்திருந்தது. தவிர, பூங்குன்றனுக்குத் தனிப்பட்ட அதிகாரங்களையும் ஜெயலலிதா வழங்கியிருந்தார்.

ஆனால் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அப்படியே மாறிப் போனார் பூங்குன்றன். அரசியல்வாதிகளிடம் இருந்து ஒதுங்கி முழு நேர ஆன்மீகவாதியாகி விட்டார். 

இந்நிலையில் அவர், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் முகம் தெரியாத முகநூல் என்ற தலைப்பில் அற்புதமான பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில் முகம் தெரியும் போதே ஏமாறும்  நாம் முகம் தெரியா போது… சிந்தியுங்கள் ..செயல் படுங்கள்… வாழ்க்கை உங்கள் கையில்… தெரிந்தவர்களோடு பழகுங்கள்… உறவோடு சிரியுங்கள்….குடும்பத்தோடு கொண்டாடுங்கள்…உறவோடு சிரிக்க முடியாதவர்களே !! முகநூலில் சிரிக்கிறார்கள் … கவனம் என பதிவிட்டுள்ளார்.

பூங்குன்றனின் இந்த அற்புதப் பதிவு சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகின்றது.