ponraathakirushnan speech is shameful - stalin angry

மைல் கல்லில் இந்தியில் எழுதியிருப்பது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் இந்தியில் எழுத்துக்கள் எழுதப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த செயலுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது அவர்தான் இந்த நடைமுறையை செயல்படுத்தினார் எனவும், திமுக அவர்கள் முகத்தில் கருப்பு மை பூசி கொள்ளட்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மைல் கல்லில் இந்தியில் எழுதியிருப்பது குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது வெட்கப்படவேண்டிய விஷயம் என சாடியுள்ளார்.