ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பெட்ரோலிய துறை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இன்று கையெழுத்தாகிறது. இதனால், பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தத்துக்கு கையெழுத்தாக உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களோடு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. எந்த ஒரு புதிய நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவில்லை.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியால், யாரும் குழப்பமடைய வேண்டாம்.நெடுவாசல் போராட்ட குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

அதுபோல், மக்களின் ஆதரவு இல்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.