கட்சிக் கொள்கையை குலைக்கும் எந்த அறிக்கையையும் வெளியிட கூடாது… பாஜகவின் பொங்குலேடி சுதாகர் ரெட்டி எச்சரிக்கை!!

கட்சிக் கொள்கையில் இருந்து விலகும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மாநில பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ponguleti sudhakar reddy has sent a word of caution to tn bjp office bearers

கட்சிக் கொள்கையில் இருந்து விலகும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மாநில பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பொங்குலேடி சுதாகர் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கண்ணியம், ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்காக, அனைத்து பாஜக அலுவலகப் பணியாளர்கள், மற்ற தலைவர்கள் ஆகியோர் ஊடகங்களில் பேசும் போதோ சமூக ஊடகங்களில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடும் போதோ கட்சி கொள்கையை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உடனே காயத்ரி ரகுராம் போட்ட ட்வீட் என்ன தெரியுமா?

உள் விவகாரங்கள் ஏதேனும் இருந்தால், அதை மாநிலத் தலைமை மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களைப் பிரச்சாரம் செய்து, மக்களுடன் ஆழமான மற்றும் நேரடியான ஈடுபாட்டைக் கொண்டிருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: விளக்கம் சொல்லக்கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை... இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் கருத்து!!

அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். பொதுவாக மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கவும், குறிப்பாக ஆளும் திமுக அரசின் தவறான ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல்களை கேள்விக்குட்படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios