Asianet News TamilAsianet News Tamil

கரும்பை சேர்த்துடீங்க.. விடியா திமுக அரசே பணம் எங்கே? ஸ்டாலினை ரவுண்ட் கட்டும் எடப்பாடியார்..!

பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.

Pongal Gift issue... Edappadi palanisamy slams dmk government
Author
Tamil Nadu, First Published Nov 17, 2021, 4:54 PM IST

விடியா திமுக அரசு அறிவித்துள்ள பொங்கள் பரிசுப் பொருட்களில் பணத்தை சேர்க்காமல் விட்டு விட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022ம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார். 

Pongal Gift issue... Edappadi palanisamy slams dmk government

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இதில் கரும்பு இடம்பெறவில்லை என்றும், உடனடியாகப் பொங்கல் தொகுப்பில் விடுபட்ட கரும்பை இணைக்க வேண்டும் என்றும் கடலூர் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.

Pongal Gift issue... Edappadi palanisamy slams dmk government

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அம்மா அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும், முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.

 

தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு  சேர்க்கப்பட்டு, தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios