பொங்கல் தொகுப்பு வழங்கியதன் மூலம் திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யாதது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும். நீட் விவகாரத்தில் திமுக நாடகம் உண்மையை மக்களிடம் வெளிப்படையாக திமுக தெரிவிக்க வேண்டும்.
பொங்கல் தொகுப்பு வழங்கியதன் மூலம் திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்;- கடந்த முறை அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு 2,500 ரூபாய் பணமும், பொங்கல் பரிசும் சிறப்பாக வழங்கி மக்களுடைய நினைவில் என்றைக்கும் நிலைத்து இருக்கக்கூடிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெல்லம், அரிசி தருகிறோம் என்று சொல்லி தமிழகத்திலேயே கொள்முதல் செய்யாமல் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்து தரமற்ற, சாப்பிடுவதற்கு உதவாத பொருட்களை எல்லாம் கொண்டு வந்து விநியோகித்துள்ளனர்.

பொங்கல் தொகுப்பு பொருட்களின் எண்ணிக்கை 21 எண்ணிக்கை என்று சொன்னார்கள். பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் 21 என்று சொன்னாலே உருப்படாது என்று சொல்வார்கள். அதுபோல 21 பொருட்களை தருகிறோம் என்று சொல்லிவிட்டு மிக குறைவான பொருட்களையே கொடுத்திருக்கிறார்கள். தமிழ், தமிழ் மக்கள் என்று பேசுபவர்கள், அரசு பணியெல்லாம் தமிழகர்களுக்குதான் முன்னுரிமை என்று பேசுபவர்கள் இந்த பொங்கல் தொகுப்புகளை வெளிமாநிலத்தில் சென்று கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏன் இந்த பொருட்களுக்கு தமிழகத்தில் பற்றாக்குறையா? தட்டுப்பாடா? என்பது தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

பொங்கல் தொகுப்பு வழங்கியதன் மூலம் திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்யாதது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும். நீட் விவகாரத்தில் திமுக நாடகம் உண்மையை மக்களிடம் வெளிப்படையாக திமுக தெரிவிக்க வேண்டும் என ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
