அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக 5000 ருபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் விஸ்னுபிரசாத் வலியுறுத்தியுள்ளார். 

கொரானா பெயரை சொல்லி தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாகவும், அதனை பட்டியலிட்டு கூறும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல்  தலைவர் எம்.கே. விஷ்ணு பிரசாத் சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: இது ஒரு விளம்பர அரசாங்கம், அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களை சென்றடைகின்றது என்பது கானல் நீராக தான் உள்ளது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் 110 விதியின் கீழ் கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட 60 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ருபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட 1500 கோடி ருபாய் என்ன ஆனது?  இதுவரை மக்களுக்கு வழங்கவில்லை. 

வாக்கு வங்கிக்காக தான் மக்களுக்கு அரசு சலுகைகள் அளிக்கிறது.  கொரோனா ஊரடங்கின் போது வெறும் ஆயிரம் ரூபாய் தான் வழங்கினார்கள்.அப்படி வழங்கிய ஆயிரம் ரூபாயும் அனைவருக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை.10 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. கேரள, கர்நாடகம், டெல்லி அரசுகள் 5000 ரூபாய் வழங்கியது. பொங்கலுக்கு 2000 ரூபாய் வழங்குவதாக தகவல் வருகிறது. இதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சக்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாற்றியிருக்கிறார்கள். இது தேர்தல் பலனுக்காக அரசு வழங்கவுள்ளது. இந்த கொரானவை வைத்து நிறைய பணத்தினை இந்த அரசாங்கம் கொள்ளை அடித்துள்ளது. 

வெள்ளை அறிக்கை கேட்டால் தற்போது வரை இந்த அரசாங்கம் அதனை தரவில்லை.542  முன்கள பணியாளர்கர் இறந்துள்ளார்கள். ஆனால் 4 பேருக்கு தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் மார்ச் முதல் இதுவரை எஎவ்வளவுவு செலவு செய்தார்கள். சிகிச்சையே  கிடையாது, ஆனால்  சிகிச்சையே இல்லாத நோய்க்கு இவ்வளவு செலவு செய்துள்ளார்கள். அம்மா குடிநீர் திட்டம் என்ன ஆனது? தற்போது எந்த இடத்திலும் அம்மா மலிவு விலை குடிநீர் விற்பனை இல்லை.தனியார் குடிநீர் தான் கிடைகின்றது, அரசுக்கும் தனியாருக்கும் என்ன ஒப்பந்தம்.  அம்மா திட்டம் என்று கூறி இப்போது எதற்கு மினி கிளினிக். ஏற்கனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஏன் மேம்படுத்த வில்லை. வெப்பநிலை மற்றும் மாத்திரை கொடுக்க அவர்களுக்கு இங்கு வேலை. தேர்தல் வரை இது செயல்படுமா? 

ஆரம்ப சுகாதார நிலையம் சரியாக செயல்படாத போது , மினி கிளினிக் எதற்கு?  மீண்டும் மக்களை முட்டாளாக்கும் வேலையை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் இல்லை என்று சொல்ல சொல்லுங்கள், நான் ஆதாரம் தருகிறேன். தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு  பொங்கல் பரிசாக 2000 ருபாய் வழங்க் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படியானால் இவர்கள் ஏற்கனவே அறிவித்த கஜா புயல் நிவாரனம் 2000 ருபாயும் கால தாமதம் செய்து மக்களை ஏமாற்றியதற்காக 1000 அபராதமும் சேர்த்து 5000 ருபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.