அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 ஜனவரி 4ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சேலத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில்: 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும். ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, திராட்சை முந்திரி வழங்கப்படும். துண்டு கரும்புக்கு பதில் முழு கரும்பு வழங்கப்படும். 2021 ஜனவரி 4ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.  எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என முதல்வர்தெரிவித்துள்ளார்.

கடந்த முறை பொங்கல் பரிசாக பச்சரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டில், ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.