குமரி மாவட்ட மக்கள் விரைவில் பசுமை வழிச்சாலையில் பயணிக்கலாம் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் பயண நேரம் மூன்றரை மணியிலிருந்து இரண்டரை மணி நேரமாக குறையும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசலும் பயண நேரமும் குறையும். நான்கு வழிச்சாலை பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு சாலை பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த சாலை பசுமை வழிச்சாலையாக அமையும் விதமாக பாலக்கரையிலிருந்து திருவனந்தபுரம் வரை சாலையின் இரு மறுங்கிலும் செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட மக்கள் விரைவில் பசுமை வழிச்சாலையில் பயணம் செய்யலாம் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அமைச்சரின் பதிவு, இந்த சாலை அமைக்கும் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த தகவல் குமரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக அமைந்துள்ளது.